தமிழகத்தில் 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவனை அமைப்பது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநிலங்களுக்காக இலவசமாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் உலகளாவிய டெண்டருக்கு அவசியம் இல்லை. உலகளாவிய தடுப்பூசி ஒப்பந்தம் மீண்டும் தேவைப்படாது.
தன்னலம் கருதாமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா பெருந்தொற்று சூழலை தவறாக பயன்படுத்தும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.