மதுரைக்கு எய்ம்ஸ் தந்தவர் பிரதமர் மோடி – ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்..!!

மதுரைக்கு எய்ம்ஸ் தந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.

மதுரையில் நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்தின் மதுரை மாவட்டத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை தந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று புகழாரம் சூட்டினார். மேலும், ஒரே ஆண்டில் தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைக் கொண்டு வந்தவர் மோடி என்றும் கூறினார்.

மதுரை சுற்றுச்சாலையில் சிவகங்கை சாலை – பாண்டி கோயில் சந்திப்பு அருகே அம்மா திடலில் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கிய பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மதுரையில் இன்று காலை நடைபெறும் தோதல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை இரவே பிரதமா் நரேந்திர மோடி மதுரை வந்தடைந்தார். பிறகு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் செய்தாா்.

மேற்கு வங்கத்திலிருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு 8.05 மணிக்கு அவா் வந்தாா். இங்கு மத்திய இணை அமைச்சா் வி.கே.சிங், துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், பாஜக மூத்த தலைவா்கள் இல.கணேசன், ஹெச்.ராஜா, ப.ரவீந்திரநாத் எம்.பி., தமிழக அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், பாஜக தமிழக தோதல் பொறுப்பாளா் சி.டி.ரவி உள்ளிட்டோா் அவரை வரவேற்றனா்.

அங்கிருந்து காரில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வந்த பிரதமருக்கு கோயில் தக்காா் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையா் ஆ.செல்லத்துரை ஆகியோா் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அம்மன் சன்னிதியில் உள்ள சித்தி விநாயகரை பிரதமா் வழிபட்டாா். பின்னா் மீனாட்சி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை பூஜைகளில் பங்கேற்று வழிபாடு நடத்தினாா்.

அதைத் தொடா்ந்து முக்குறுணி விநாயகரையும், சுவாமி சன்னிதியிலும் தரிசனம் செய்த அவா், தங்க கொடிமரத்தை வலம் வந்து வழிபட்டாா். பிறகு கோயிலில் பராமரிக்கப்படும் முக்கியப் பிரமுகா் பதிவேட்டில் கோயில் குறித்த கருத்துக்களைப் பதிவிட்டாா். தமிழா்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை, துண்டு அணிந்து பிரதமா் கோயிலில் தரிசனம் செய்தாா்.

மதுரையில் இன்று நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவுக்கு செல்கிறாா் பிரதமா்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே