கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டுக்கு வந்த வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை, அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்தி உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், கரூரிலும் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் சுமார் 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடைபேற்று வருகின்றன.

திமுகவிலிருந்து விலகி, 2000-ஆவது ஆண்டில் அதிமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, கரூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகி, அமைச்சர், மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை வகித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவிலிருந்து விலகி டிடிவி தினகரனின் ஆதரவாளராகி, பிறகு 2018-ஆம் ஆண்டில் மீண்டும் திமுகவுக்குத் திரும்பினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே