551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவு..!!

நாடு முழுவதும் புதிதாக 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் மொத்தம் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் அந்த மாவட்டத்தில் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே