இந்தியாவில் 4.25 லட்சத்தை கடந்த கொரோனா எண்ணிக்கை..,

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா அடுத்து தற்போது இந்தியாவிலும் கொரோனா தாக்கம் வேகம் எடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4,25,282 ஆக அதிகரித்துள்ளது.

1,74,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2,37,196 பேர் குணமடைந்துள்ளனர்.
13,699 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இந்தியா முழுவதும் 14,821 பேர் தொற்றால் புதியதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. 445 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுவரை 6170 பேர் உயிரிழந்துள்ளனர் 65,744 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,32,075 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6170 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 65,744 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 59,377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 757 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 32,754 பேர் குணமடைந்துள்ளனர்.

தலைநகர் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 59,746 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2175 பேர் உயிரிழந்துள்ளனர் 33,013 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே