ஊரடங்கில் வெளியில் சுற்றியவர்களை “கும்பிட்டு”வீட்டுக்கு அனுப்பிய காவல் உதவி ஆய்வாளர்..!!

மதுரையில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களிடம் மேலூர் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி ‘சாமி வெளிய வராதீங்க’ என்று கூறியுள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.49 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரே நாளில் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு ஏற்கனவே அமலில் இருக்கிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முன்பே தமிழ அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் நேற்று இரவு கொரொனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்தது. வரும் திங்கள் முதல் திரையரங்கம், வணிக வளாகம், கேளிக்கை விடுதி உள்ளிட்டவை இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் வங்கிகளின் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளபோது இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றியவர்களிடம் மேலூர் காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கையெடுத்துக் கும்பிட்டு “சாமி வெளிய வராதீங்க” என்று வேண்டுகோள் விடுத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே