தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.252.48 கோடிக்கு மது விற்பனை..!!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 258 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.58.37 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

மதுரை மண்டலத்தில் ரூ.49.43 கோடிக்கு நேற்று மது விற்பனை நடந்துள்ளது.

அதேபோல் திருச்சி மண்டலத்தில் ரூ.48.57 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.48.32, சேலம் மண்டலத்தில் ரூ.47.79 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க மதுக்குடிப்போர் குவிந்தனர்.

டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலான கடைகளில் கூட்டம் முண்டியடித்ததால் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் இருந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே