டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளது.

டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக 13 நாட்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் போராடும் விவசாயிகள் சார்பாக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் இன்று நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்; அவரது வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே