பிரதமர் மோடி நேற்று காஷ்மீர் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.
கடந்த ஆண்டுகளிலும் அவர் பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைகளில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.
நாட்டை காக்கும் பணியில் குடும்பத்தினரை விட்டு பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் நாட்டின் எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக தீபாவளியை வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த ஆண்டும் எல்லையில் தீபாவளி கொண்டாடும் வீரர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்றார். காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் பிரதமர் மோடி காஷ்மீருக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.