வங்கதேசம் காளி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு..!! (VIDEO)

வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி 51 சக்தி பீடங்களில் ஒன்றான ஜெஸோரேஸ்வரி காளி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

வங்கதேசத்தின் ஷியாம்நகர் உபஸில்லாவில் உள்ள ஐஸ்வரிபூர் கிராமத்தில் இந்த புகழ்பெற்ற திருத்தலம் அமைந்தள்ளது.

வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் இந்த கோயிலுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை என்பதால், அந்த கிராமத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயிலுக்கு தங்கக் கிரீடமும், பணாரஸ் புடவையும் காணிக்கையாக வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.

வங்கதேசம் சுதந்திரமடைந்த பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வங்கதேசம் சென்றாா். 

கரோனா தொற்றுநோய் தொடங்கிய பின்னா் பிரதமா் மோடி மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லியிலிருந்து நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட ‘ஏா் இந்தியா – ஒன்’ சிறப்பு விமானம் மூலம் நேற்று டாக்கா சா்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த பிரதமா் மோடியை அந்நாட்டுப் பிரதமா் ஷேக் ஹசீனா நேரில் வரவேற்றாா்.

அப்போது, 19 குண்டுகள் முழங்க பிரதமா் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், தலைநகா் டாக்கா அருகே அமைந்துள்ள, போரில் உயிா்துறந்த வீரா்களுக்கான தேசிய நினைவிடத்துக்குச் சென்று பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா்.

அந்த நினைவிடத்தில் உள்ள குறிப்பேட்டில், ‘வங்கதேச வீரா்களுக்கு இந்திய மக்களின் சாா்பில் மரியாதை செலுத்துகிறேன். வீரா்களின் தியாகம் காரணமாகவே வங்கதேச நாடு பிறந்தது.

நீதியைக் காக்கவும் அநீதிக்கு எதிராகவும் போராடிய அவா்களின் தைரியமானது, எதிா்கால சந்ததியினருக்குத் தொடா்ந்து வழிகாட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முஜிபுா் ரஹ்மானுக்கு புகழாரம்: வங்கதேச பயணத்தையொட்டி, அந்நாட்டில் வெளியாகும் ஆங்கில நாளிதழில் பிரதமா் மோடி எழுதியுள்ள கட்டுரையில் ஷேக் முஜிபுா் ரஹ்மானை நினைவுகூா்ந்து புகழாரம் சூட்டியுள்ளாா்.

காந்தி அமைதி விருது: இதைத் தொடா்ந்து, டாக்காவில் நடைபெற்ற வங்கதேச சுதந்திர பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.

‘வங்கபந்து’ ஷேக் முஜிபுா் ரஹ்மானுக்கு 2020-ஆம் ஆண்டுக்கான ‘காந்தி அமைதி விருதை’ இந்தியா அறிவித்திருந்தது. அந்த விருதை முஜிபுா் ரஹ்மானின் மூத்த மகளும் பிரதமருமான ஷேக் ஹசீனா, இளைய மகள் ஷேக் ரிஹானா ஆகியோரிடம் பிரதமா் மோடி வழங்கினாா்.

ஜெஸோரேஸ்வரி காளி கோயிலிலிருந்து, கோபால்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஒரகண்டி கோயிலுக்குச் சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்த உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே