நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஒத்திவைப்பு…

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நாளை நிறைவேற்ற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் தாக்கூர் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர்கள் நான்கு பேரும் நாளை தூக்கிலிடப்பட இருந்தார்கள்.

இந்நிலையில், தூக்கு தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி, குற்றவாளிகள் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி. சிங், குற்றவாளிகளில் ஒருவரான அக்க்ஷய் குமார், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிக்க உள்ளதாகவும்; எனவே, குற்றவாளிகளுக்கு உள்ள சட்ட வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும் வகையில், அவர்களுக்கு நாளை நிறைவேற்றப்பட இருக்கும் தூக்கு தண்டனையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரி வாதிட்டார்.

இதையடுத்து, அடுத்த உத்தரவு வரும் வரை குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட தடை விதித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே