சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த விராட் கோலி

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள பட்டியலின் படி இரண்டாவது இடத்தில் இருந்த விராட் கோலி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடித்ததன் மூலம் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சரியாக செயல்படாததால் ஸ்டீவ் ஸ்மித் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும்,

இந்தியாவின் சட்டேஸ்வர் புஜாரா நான்காவது இடத்திலும் நீடித்து வருகின்றன.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 12 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய வீரர் ரஹானே ஓரிடத்தில் பின்தங்கி ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதன் மூலம் 10 வீரர்கள் பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்த ஆண்டில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை.

ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதால் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதல் இடத்தை பிடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே