‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது விஜய் வெளியிட்ட செல்ஃபி இணையத்தில் வைரலானது. போன வருடம் இதே தினத்தில் எடுக்கப்பட்ட அந்த செல்ஃபியை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘மாஸ்டர்’.

இதன் படப்பிடிப்பு டெல்லி, சென்னை, நெய்வேலி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. நெய்வேலி படப்பிடிப்பின் போது, விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது.

அப்போது விசாரணைக்காக நெய்வேலி படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் விஜய். அந்த சமயத்தில் இது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் வருமான வரி சோதனை முடிந்து, நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 

இந்த சம்பவத்திற்குப் பிறகு தினமும் மாலையில் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது. அப்போது படப்பிடிப்புத் தளத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது ஏறி ரசிகர்கள் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் விஜய்.

அதோடு இந்த செல்ஃபியை தனது ட்விட்டரில் பகிர்ந்தார் விஜய். இதையடுத்து அந்த படம் இணையத்தில் வைரலானது.

குறிப்பாக 2020-ம் ஆண்டு அதிக ரீ-ட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்ற பெருமையையும் விஜய்யின் நெய்வேலி செல்ஃபி பெற்றது.

கடந்த வருடம் இதே தினத்தில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தை தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

#1YearOfMasterSelfie என்ற ஹேஷ் டேக்கில் விஜய் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே