திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று துவங்கியது .

காணொளி மூலம் நடக்கும் இக்கூட்டத்தில் 67 இடங்களில் இருந்து திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர்.

அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி நியமிப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக சட்டதிட்ட விதி பிரிவு 7(3) கீழ் ஆ.ராசா, பொன்முடி நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

துணைப் பொதுச்செயலராக ஐ பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது ஆ. ராசா, பொன்முடி ஆகியோர் துணை பொதுச்செயலாளராக பதவி வகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே