பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 16.221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலங்களில் முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்வது வழக்கம்.

இதற்காக பண்டிகை காலங்ககளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் 16,221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது,

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 11, 12, 13 ஆகிய தேதிகளில் 16,221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 

இதில் சென்னையிலிருந்து 4,078 பேருந்துகள், மற்ற முக்கிய நகரங்களிலிருந்து 5,993 பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்வதற்காக 13 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படும். கோயம்பேட்டில் 10, தாம்பரம் சானிடோரியத்தில் 2, பூவிருந்தவல்லியில் ஒரு மையம் செயல்படும்.

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிக்கலாம் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே