10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி வழக்கு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

அதில், கரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஜூன் 15- ஆம் தேதி முதல் ஜூன் 25- ஆம் தேதி வரை நடத்தப்படும்.

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

தமிழகம் முழுவதும் 15,690 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

மார்ச்- 24 ஆம் தேதி நடைபெற்ற 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு ஜூன் 18- ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும்” என்று கூறி இருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஆசிரியர் சங்கம் சார்பாக தொடரப்பட்ட இந்த வழக்கில், ஆசிரியர்களிடம் கருத்து கேட்காமல் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்; எனவே கரோனா பாதுகாப்பு பிரச்சனைக்காக தேர்வை இரண்டு மாதங்கள் தள்ளிவைக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே