பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்றுடன் நிறைவு

பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இதுவரை 95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

2 கோடியே 30 ஆயிரத்து 431 குடும்ப அட்டைகள் பொங்கல் பரிசு பெற தகுதி உள்ளவை என்றும்; நேற்று மாலை 6 மணி வரை, ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் பேர் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மீதமுள்ள 10 லட்சத்து 59 ஆயிரம் பேர் இன்றைக்குள் பெற்றுக்கொள்ளுமாறு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே