பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சி, டி பிரிவு ஊழியர் களுக்கு தற்காலிக போனஸ் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழக நிதித் துறை வெளியிட்டுள்ள அரசாணை களில் கூறியிருப்பதாவது:

கடந்த 2019-20 கணக்காண்டுக்கு சி, டி பிரிவை சேர்ந்த முறையான காலமுறை ஊதியம் பெறும் அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு மாதத்துக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு தற்காலிக மிகை ஊதியம் (அட்ஹாக் போனஸ்) வழங்கப்படும்.

அதேபோல, 2019-20 கணக் காண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணி யாற்றிய, சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலை யான ஊதியம் பெற்றுவந்த முழுநேர மற்றும் பகுதிநேர பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், தொகுப்பூதியம் அல்லது சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி, குறு அங்கன்வாடி களில் பணியாற்றுவோர், கிராம உதவியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் மற்றும் ஒரு பகுதி தினக்கூலியாக பணியாற்றி பின்னர் நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் (ஸ்பெஷல் அட்ஹாக் போனஸ்) ரூ.1,000 வழங்கப்படும்.

இதில், தற்காலிக போனஸை பொருத்தவரை கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி சி, டி பிரிவு ஊதிய அடிப்படையில், மாதாந்திர ஊதியம் ரூ.3 ஆயிரம் என்பதை உச்ச வரம்பாக கொண்டு கணக்கிடப்படும்.

திருத்திய சம்பளத்துக்கு முந்தைய சம்பளம், திருத்திய சம்பளம் பெறுபவர்களை பொருத்த வரை மாதம் ரூ.3 ஆயிரம் என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டு ஊதிய அடிப்படையில் தற்காலிக போனஸ் கணக்கிடப்படும்.

ஓய்வூதியம்

மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம அலுவலர் கள், கிராம உதவியாளர்கள், உட்பட அனைத்து சி, டி பிரிவு ஓய்வூதியர் கள், கடந்த 2017 அக்டோபர் 1-ம் தேதி முதல் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் பெறும் சத்துணவு அமைப் பாளர்கள், அங்கன்வாடி, குறு அங்கன்வாடி பணியாளர்கள், சத் துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி செயலர், கிராம நூலகர்கள், பெருக்கு பவர்கள், துப்புரவு பணியாளர்கள், துப்புரவாளர்கள், தோட்டக் காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், காவல்நிலைய துப்புரவாளர் கள் மற்றும் ஆயா உட்பட அனைத்து வகை தனி ஓய்வூதியர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதியர்கள் எந்த பணியில், பிரிவில் ஓய்வு பெற்றிருந்தாலும், பணியிடை மரணம் அடைந்த பணியாளர்களாக இருந்தாலும் ஒட்டுமொத்த பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.500 மட்டும் வழங்கப்படும்.

இந்த உத்தரவு தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து சி, டி பிரிவு ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும்.

இந்த பொங்கல் பரிசு, ஜனவரி 4-ம் தேதியோ (நேற்று), அதற்கு பின்னரோ பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு அனுமதிக்கப் படாது.

இவ்வாறு அரசாணைகளில் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே