அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகுவதாக அக்கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துளார்.

இதுகுறித்து சென்னையில் எய்த்யல் சந்திப்பில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், நாங்கள் குற்ற பரம்பரை அல்ல கொற்ற பரம்பரை.

இந்த கொற்ற பரம்பரையாக இருந்த மக்களுக்கு அடிப்படை இடஒதுக்கீடு கேட்பதற்கு நீண்ட காலமாக போராடி கொண்டியிருக்கிறோம்.

ஆனால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, மறுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

அதற்கு மாறாக எங்கள் சமூகத்தை புறம் தள்ளுவதற்கு முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசும், என் சமூகம் சார்ந்த 8 அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து இந்த சமூகத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார்கள். 

சமூக நீதியில் முதல்வர் பழனிசாமி எண்ணற்ற சமுதாய மக்களை புறம் தள்ளி ஒருசில சமுதாயத்தை தனது அரசியல் ஆதாயத்திற்காக இந்த அவசரகாலத்தில், ஆளும் அரசை விமர்சனம் செய்த பாமகவுக்கு வழங்கப்பட்டு, எங்களை புறம் தள்ளியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காணப்பட்ட இந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி அதிமுகவில் இருந்து எங்களை நாங்கள் விடுவித்து கொள்கிறோம் என அறிவித்துள்ளார்.

வரும் தேர்தலில் எங்கள் சமூகங்கள் தீர்மானிக்க கூடிய 84 தொகுதிகளில் களமிறங்கி எங்களுக்கு துரோகம் விதைத்த அவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ய போகிறேன் என கூறியுள்ளார்.

நாங்கள் இல்லாமல் தமிழகத்தில் எவர் ஒருவராலும் அரசியலே செய்ய இயலாது என்கிற நிலையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ற நிலையில் தள்ளப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே