கோழை போல ஒளிந்து கொண்ட நித்யானந்தா – மன்னார்குடி செண்பக ராமானுஜ ஜீயர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை யார் எதிர்த்தாலும் அவர்கள் தேச துரோகிகள் என மன்னார்குடி செண்பக ராமானுஜ ஜீயர் கருத்து தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர், குடியுரிமை திருத்த சட்டம் நாட்டின் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த சட்டத்தை யார் எதிர்த்தாலும் அவர்கள் தேசத் துரோகிகள் என்று அவர் சாடினார். 

நித்யானந்தா பற்றி குறிப்பிட்ட அவர், சட்டத்தை மதித்து நேரில் வராமல் கோழை போல ஒளிந்து கொண்டு இருப்பதாக சாடினார்.

நாட்டை விட்டு ஓடுவது பெரிய தேச துரோகம் என்றும் அவர் தெரிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே