கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு கிலோ தங்கத்தை போலீசார் சுருட்டிவிட்டனர்: கொள்ளையன் சுரேஷ் பகீர் புகார்

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு கிலோ தங்கத்தை திருவாரூர் போலீசார் சுருட்டிவிட்டதாக கொள்ளையன் சுரேஷ் பகீர் புகார் அளித்துள்ளார். 

திருச்சி லலிதா ஜுவல்லரி கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் வேறு ஒரு வழக்கு தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் அவரை போலீசார் மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது தம்மிடம் இருந்த ஐந்து கிலோ 700 கிராம்  தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துவிட்டு, 4 கிலோ 700 கிராம்  தங்க நகைகளை மட்டுமே பறிமுதல் செய்ததாக கூறுவதாக சுரேஷ் புகார் தெரிவித்தார்.

ஒரு கிலோ நகைகளை போலீசார் சுருட்டிவிட்டதாக செய்தியாளர்களிடம் சுரேஷ் அப்போது கூறினார்.  

திருவாரூர் சோதனைச் சாவடியில் போலீசாரிடம் சிக்கிய மணிகண்டனிடம் இருந்து இந்த நகைகளை திருவாரூர் போலீசார் சுருட்டியதாகவும் சுரேஷ் குற்றம்சாட்டினார்.

மேலும் தாங்கள் கொள்ளையடித்த நகைகளை விட அதிகமாக நகைகளை போலீசார் கேட்டு அச்சுறுத்துவதாகவும் சுரேஷ் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே