எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி (வயது 80) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சாயாவனம் நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர் சா. கந்தசாமி. 1940-ம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்தவர்.

சகாக்களுடன் இணைந்து கசடதபற என்ற இலக்கிய இதழை உருவாக்கினார். பின்னர் குறும்படங்களையும் இயக்கினார் சா. கந்தசாமி. சுடுமண் சிலைகள் தொடர்பான அவரது குறும்படம் சர்வதேச விருது பெற்றது.

சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோரது வாழ்வை குறும்படங்களாக்கி உள்ளார். 1989-ல் சா. கந்தசாமியின் காவல் தெய்வங்கள் ஆவணப்படம், சைப்ரஸ் விழாவில் முதல் பரிசு பெற்றது.

சா. கந்தசாமியின் விசாரணை கமிஷன் நாவலுக்கு 1998-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சா. கந்தசாமி இன்று சென்னையில் காலமானார்.

அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கவிஞர வைரமுத்துவின் இரங்கல்:

மறைந்தாரே சா.கந்தசாமி!

‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே!

தன்மானம் – தன்முனைப்பு

தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ!

சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது

இவ்வாறு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே