காவலர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் தான் நிஜ ஹீரோக்கள் – நடிகர் சூரி

கொரோனா தடுப்பு பணிகளில் சூப்பர் ஹீரோவாக செயல்படும் காவலர்களை நகைச்சுவை நடிகர் சூரி நேரில் சென்று பாராட்டியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டி 1 காவல்நிலையத்துக்கு சென்ற அவர் போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கி நெகிழ வைத்தார்.

மேலும் அவர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி போன்றவற்றையும் வழங்கினார். இதனையடுத்து காவல்துறையினருடன் நின்று அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் நடிகர் சூரி அளித்த பேட்டியில், கொரோனா என்கிற கொடூரமான வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்த வைரஸ் பரவாமல் இருக்க மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்லிவிட்டு, இரவு பகல் பாராமல், தன்னுடைய குடும்பத்தை பிரிந்து, உயிரை பணயம் வைத்து காவல்துறையினர் வேலை செய்து வருகிறார்கள்.

நடமாடும் தெய்வமாக, காக்கி சட்டை போட்ட அய்யனாராக காவல்துறையினர் நம்மை பாதுகாத்து வருகிறார்கள்.

இன்று போலீசாரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. 50 பேருக்கு மேல் பதித்திருக்கிறார்கள்.

அவர்களது குடும்பத்தினர் பதறிப்போய் இருக்கிறார்கள்.

தன்னலமின்றி செயல்படும் இவர்கள் தான் ரியல் ஹீரோ. வழக்கமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவோம்.

ஆனால் எனக்கு இவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கணும்னு தோணுச்சு. இவர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதை நான் பெருமையாக நினைக்கிறேன் என கூறினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே