தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ – மாணவிகள் எழுதும் பிளஸ்- டூ தேர்வு இன்று தொடங்குகிறது.

24 ம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தேர்வு , காலை 10 மணிக்கு துவங்கி, மதியம் 1. 15 மணி வரை நடைபெறும்.

முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்து பார்க்க அனுமதிக்கப்படும் என்றும், அடுத்த 5 நிமிடங்கள் மாணவர் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு மற்றும் சுய விவரங்கள் சரிபார்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முறைகேட்டை தடுக்க, மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக பள்ளி கல்வி தேர்வு துறை தெரிவித்துள்ளது.

பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 14 ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே