தயவுசெய்து சிறுமிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் – அரவிந்த் கேஜரிவால்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

மேற்கு தில்லியில் உள்ள வீடொன்றில், செவ்வாய்க்கிழமை தனியாக இருந்த 13-வயது சிறுமி, அடையாளம் தெரியாத நபா்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டாா்.

மேலும், சிறுமியைத் தாக்கிவிட்டு அவா்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனா்.

சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அவரது பெற்றோருக்கும் போலீஸாருக்கும் அக்கம் பக்கத்தில் இருப்பவா்கள் தகவல் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, உயா் சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

இந்நிலையில், இச்சிறுமியை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இதற்கிடையே இவ்வழக்கில் காவல்துறையினர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தில்லி முதல்வர் தனது சுட்டுரையில், “பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களிடம் தொலைபேசியில் பேசினேன். நான் நேற்று சிறுமியை மருத்துவமனையில் சந்தித்தேன்.

அவர் இன்னும் உயிருக்கு போராடுகிறார். மருத்துவர்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள். தயவுசெய்து சிறுமிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

இதற்கிடையில், காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே