பேஸ்புக் லைவ் வீடியோ வெளியிட்டு , தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை !!

போஜ்புரி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த நடிகை அனுபமா பதக் மும்பையில் உள்ள தனது வாடகை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அனுபமா கடந்த ஞாயிற்றுகிழமை தனது வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார், இதுபற்றி மும்பை காவல்துறை தீவிரமாக விசாரித்து வந்தது.

அனுபமா பீகாரில் இருந்து நடிப்பிற்காக மும்பையில் வாழ்ந்து வந்தார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அனுபமா பேசிய வீடியோவில் இந்த உலகில் யாரையும் நம்பமுடியவில்லை, நான் ஏமாற்றபட்டுவிட்டேன்.

எனக்கு உதவி செய்ய நண்பர்கள் தயாராக இல்லை என கூறியிருந்தார்.

மேலும் இவருடைய இரு சக்கர வாகனத்தை திரும்பத்தராமல் ஒருவர் ஏமாற்றிவிட்டதாகவும், பொதுமுடக்கம் காரணமாக பணம் இல்லாமல் அனுபமா தவித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே