மேத்யூ ஹேடன் வெளியிட்ட புகைப்படம்: தளபதி விஜய் பற்றி என்ன கூறியுள்ளார் பாருங்க.

விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார் மேத்யூ ஹேடன்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன். இவர் உலக அளவில் பாப்புலரான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சில வருடங்கள் விளையாடி உள்ளார்.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 மற்றும் 2011ல் டைட்டில் வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர் மேத்யூ ஹைடன். அவர் 2012 அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதற்கு பிறகு தற்போது கிரிகெட் கமெண்டரி செய்யும் பணியை செய்து வருகிறார்.
இன்னிலையில் இன்று கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் முப்பத்தி ஒன்பதாவது பிறந்தநாள் என்பதால் அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது போல மேத்யூ ஹேடன் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். அந்த போட்டோவில் நடிகர் விஜய்யும் உள்ளார். விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தன் மகன் சஞ்சய்யை தோளில் சுமந்தபடி இருக்க அருகில் தோனி மற்றும் மேத்யூ ஹேடன் இருவரும் இருக்கின்றனர்.

மேத்யூ ஹைடன் பதிவிட்டு இருப்பதாவது..

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் எம்.எஸ் தோனி. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள். Legendary விஜய் சந்திரசேகர் உடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களில் இது என்னுடைய ஃபேவரைட் ஒன்று” என மேத்யூ ஹேடன் தெரிவித்துள்ளார்.
மேத்யூ ஹைடன் விஜய்யின் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதிக அளவில் லைக்குகளை குவிந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் கமெண்டுகளில் ஆச்சரியத்துடன் தளபதி விஜய் பெயரை குறிப்பிட்டு பேசி வருவதையும் பார்க்க முடிகிறது.

இதை மற்ற சமூக வலைதளங்களிலும் விஜய் ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் தற்போது அனைவரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காகத் தான் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். ஷுட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள அந்த படம், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டதால் அது ரிலீசாகாமல் போனது. புதிய ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு நிலைமை சீரான பிறகு தான் வெளிவரும் என தெரிகிறது. மேலும் விஜய் ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் டிரெய்லரை ஆவது வெளியிடுங்கள் என தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால் ரிலீஸ் தேதி உறுதி ஆன பிறகு தான் ட்ரெய்லர் வெளியிடப்படும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே