மத்திய அரசு தளர்வுகளுடன் அறிவித்த ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தற்போது அன்லாக் 4.0 குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்ச்சிகளை 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கி நடத்தலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.