கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த தமிழக அரசின் அரசாணை ரத்து

பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2017 -ஆம் ஆண்டு கடலூா், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதாவது கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals and Petrochemicals Investment Region -PCPIR) அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2017 -ஆம் ஆண்டு பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே