பெட்‌‌ரோல், டீசல் விலையேற்றம் – இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!!

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். 

அதன்படி, இன்று காலை 9 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முரட்டுத்தனமான இந்த விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் மிரட்டிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய்க்கு விதித்த கலால் வரியும் அதிமுக அரசு விதித்த அதிகளவிலான வாட் வரியும்தான் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர காரணம் என்றும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் கலால் வரி விதிப்பில் மத்திய அரசுக்கு கிடைத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் எங்கு சென்றது புரியாத புதிராக இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரு லிட்டர் பெட்ரோல் போடும்போது சாலை மேம்பாட்டு வரியாக மக்கள் 18 ரூபாயை தரும் நிலையில் தனியாக சுங்கக் கட்டணம் வசூலிப்பது ஏன் எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே