சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்வு..!!

வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் விலை ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் கோயம்பேடு சந்தையில் ரூ.35 வரை விற்கப்பட்டு வந்த வெங்காயம் விலை நேற்று ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.

வெளி சந்தைகளில் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது.

இதுபற்றி மொத்த வியாபாரிகளிடம் கேட்டபோது, ”பருவம் நிறைவடையும் காலம் என்பதால் வரத்து சற்று குறைந்துள்ளது.

அடுத்த அறுவடை வெங்காயம் விரைவில் விற்பனைக்கு வந்துவிடும். அதன் பிறகு விலை குறையக்கூடும்” என்றனர்.

கோயம்பேடு சந்தையில் தக்காளி ரூ.35, சாம்பார் வெங்காயம் ரூ.120, கத்தரிக்காய், பாகற்காய் ரூ.30 என விற்கப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே