தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

பாரில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

பார்களில் இருக்கும் போது சமூக இடைவெளிகளை கடைபிடித்தல், முகக்கவசம் அணிவது கட்டாயம்.

பார்களின் நுழைவு வாயிலில் சானிடைசர் வைக்க வேண்டும்;

பார்களுக்கு வருபவர்களுக்கு வெப்ப பரிசோதனை கட்டாயம்.

பாரில் பொது இடங்களில் கை கழுவும் வசதியும், சானிடைசர்களும் இருக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளுடன் பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே