பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு..!!

பேரறிவாளளின் பரோல் 5-வது முறையாக மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். 

இதன் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு, அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.

இதை பரிசீலித்த தமிழக அரசு, முதல்முறையாக கடந்த மே மாதம் 28ஆம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. பின்னர், 4 முறை பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் இன்றுடன் முடிவடைகிறது.

இதைத்தொடர்ந்து, பேரறிவாளளின் பரோலை 5-வது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரறிவாளளின் உடல்நலன் கருதி சிறை விடுப்பை அரசு அக்டோபர் 26-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே