பெரம்பலூர் : ஆதனூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர் உயிரிழப்பு!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாரடைப்பினால் இன்று உயிரிழந்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் கிராம ஊராட்சியில் போட்டியிட்ட மணிவேல் என்பவர் 962 வாக்குகள் பெற்று ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்கி வந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து அவர் சடலத்தை மீண்டும் கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

கிராம ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றவர் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே