ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையின் போது தோல்வி பயத்தால் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளரை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
பவானி ஊராட்சி ஒன்றியம் மூன்றாவது வார்டு பதவிக்கு அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் என்பவர் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சதீஷ்குமார் 7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த ராமலிங்கம் விண்ணப்பித்ததை அடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
அப்போது ராமலிங்கம் மயங்கி விழுந்ததால் அவரை சதீஷ்குமார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மனிதாபமான அடிப்படையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை மருத்துவனைக்கு கொண்டு சென்ற சுயேட்சை வேட்பாளர் சதீஷ் குமாரை மக்கள் பாராட்டினர்.