அயோத்தி வழக்கில் எவ்வாறு தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உச்சநீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தீர்ப்பு எதுவாயினும் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அயோத்தி வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பை யாருக்குமான வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெருமைமிகு பாரம்பரியங்களான அமைதி ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும் வகையில் மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளித்து மக்கள் செயல்பட வேண்டும் என்றும் நாட்டு மக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.