அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி அனைத்து தரப்பினரும் அமைதி காக்க முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், அயோத்தி வழக்கு பல்வேறு நிலைகளை கடந்து, தற்போது உச்சநீதிமன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பினை அனைத்து தரப்பினரும் மதித்து எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப்பூங்காவாக திகழச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவிற்கே தமிழகம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.