டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடத்தில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த கட்டிடத்தின் 6வது தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
தகவலறிந்தவுடன் 5 தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கின. தீ மெல்ல, மெல்ல கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் இதுவரை தெரிய வரவில்லை. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து பேசப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.