சென்னை: எஸ்பிபியின் இளமையான, இனிமையான குரலை மீண்டும் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி இருக்கிறார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் கொரோனா தொற்றால் சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.
அப்பாவின் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மகன் சரண் தெரிவித்து இருந்தார். எஸ்பிபி விரைவில் குணமடைய பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந் நிலையில், எஸ்பிபியின் இளமையான, இனிமையான குரலை மீண்டும் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி இருக்கிறார்.
இது குறித்து டுவிட்டர் பதிவை அவர் வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது: என்றும் இளமையான இனிமையான உங்கள் குரலை மீண்டும் கேட்டு இரசித்து மகிழ ஆவலோடு காத்திருக்கிறோம். மீண்டு வருவீர்கள், நாங்கள் கேட்டு மகிழ்வோம் என்ற பெரும் நம்பிக்கையோடு விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.