ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே உள்ளது.

ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பாக மத்திய குழு, தமிழகம் வந்து ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்ககைள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் உடனான சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் ,டிஜிபி திரிபாதி பங்கேற்றுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே