தமிழகத்தில் மின்சார கட்டணம் செலுத்த 6 மாவட்டங்களில் கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தாக்கத்தால் 4 மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனால் அரசாங்கம் சில சலுகைகளை வழங்கிவருகிறது.
அதனடிப்படையில் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்படி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மின் கட்டணத்தை செலுத்த குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு காலத்தின் போது, மொத்தமாக 4 மாதம் கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து இரண்டிரண்டு மாதமாக கணக்கிட்டு வசூலிக்க உத்தரவிடக்கோரி, புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்து மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் கட்டணம் செலுத்த அறிவிக்கப்பட்ட கடைசி தேதியிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து ஜூலை 30-க்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
நோய் கட்டுப்பாட்டு பகுதியில், கட்டுப்பாடு நீக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 மாதங்களுக்கான கணக்கீட்டிலும் தனித்தனியாக 100 யூனிட்டுகள் கழிக்கப்படுகின்றன என்றும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.