வரிசையில் நின்று வாக்களித்தார் முதல்வர் பழனிசாமி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் வாக்களித்தார்.

தமிழகம் முழவதும் உள்ள 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து சேலம் மாவட்டம் நெடுங்குளம் அருகே சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களோடு மக்களாக, நீண்ட வரிசையில் தனது குடும்பத்தினருடன் வாக்களிக்க காத்திருந்தார்.

பின்னர் முதலமைச்சர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். முதலமைச்சரின் மனைவி ராதா, அவரது மகன் விபின்குமார், மருமகள் திவ்யா ஆகியோரும் வாக்குகளை பதிவு செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே