ஊழல் ஆட்சிக்கு நல்லாட்சி சாயம் பூச பாஜக முயல்வதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அதிமுக அரசுக்கு நல்லாட்சி சான்றிதழை மத்திய பாஜக அரசு செயற்கையாக அளித்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் அறிக்கையில் 9 துறைகளில், இரு துறைகளில் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தரவரிசையில் எப்படி தமிழகம் முதலிடத்திற்கு வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்மூலம் மத்திய பாஜக அரசு அதிமுக ஆட்சிக்கு ஜாமீன் கொடுக்கும் அமைப்பாக மாறியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் தொழில்துறையில் 14-வது இடமும், விவசாயத்துறையில் 9-வது இடத்திலும் உள்ள நிலையில், வேலையில்லா திண்டாட்டத்தில் முதலிடமும், நல்லாட்சியில் பூஜ்ஜியத்திற்கும் கீழே உள்ள வரையறையை பிடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் ஆட்சிக்கு நல்லாட்சி சாயம் பூசும் நோக்கில் அதிமுக ஆட்சியை தூக்கி நிறுத்த, மத்தியில் உள்ள பாஜக அரசு முனைந்திருப்பதாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்கு மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே