குஜராத் கடலோரத்தில் கரை ஒதுங்கிய பாக். படகுகள்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் அருகே கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய இரண்டு பாகிஸ்தான் மீன்பிடிப் படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள கடலோர பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு மீன்பிடி படகுகள் கரை ஒதுங்கி இருந்தன.

அந்த படகை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர், அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதும் இருக்கிறதா என சோதனை மேற்கொண்டனர்.

மேலும் அந்த படகு மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவி வந்தனரா?? என்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

எனினும் இதுவரை சந்தேகப்படும்படியாக யாரும் கைது செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இந்திய கடலோர பகுதியில், பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே