தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில்  சேலம் மற்றும் போடி ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சேலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான அஸ்தம்பட்டி, அழகாபுரம் , ஐந்து ரோடு, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் நேற்றிரவு 7 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் சிரம ம் ஏற்பட்டது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள மீனவ கிராமங்களில் கனமழை பெய்தது.

சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு தீரும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளன

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே