மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் நிரப்பும்போது ஏற்பட்ட கசிவால் 11 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக்கில் உள்ள ஜாகீர் உசேன் மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க, டேங்கர் லாரியில் ஆக்சிஜன் நிரப்பும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவு காரணமாக கொரோனா நோயாளிகள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த கசிவின்போது அருகிலிருந்த நோயாளிகளை காப்பாற்ற அவர்களது உறவினர்கள் முயன்றபோதும், 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பத்தின் காரணமாக அப்பகுதியில் 30 நிமிடங்களுக்கு ஆக்சிஜன் வெண்புகையை போல் சூழ்ந்திருந்தது.

விசயமறிந்த தீயணைப்புத்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். முதல் பணியாக ஆக்சிஜன் சப்ளையை லாரியிலிருந்து நிறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் 80 கொரோனா நோயாளிகளில் 31 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மஜீத் மேமோன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே