சென்னையில் இஸ்லாமிய சிறுவன் ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் குல்லா ஒரு கேடா என்று கேட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கண்ணதாசன் தெருவில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. 12 வயது சிறுவன் அங்கே உள்ள மசூதியில் தொழுகை நடத்த சென்று இருக்கிறார்.

அதன்பின் மாலை தொழுகை முடித்துவிட்டு அந்த சிறுவன் அரபி வகுப்பிற்கு சென்றுள்ளார்.

தினமும் அவர் அரபி வகுப்பிற்கு செல்வது வழக்கம். அதேபோல் அன்று அரபி வகுப்பிற்கு சென்றுள்ளார். தொழுகை, அரபி வகுப்பு எல்லாம் முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் அந்த சிறுவன் தனியாக சைக்கிளில் வந்துள்ளார். தினமும் அவர் அந்த சாலை வழியாக்கத்தான் திரும்பி வருவார் என்று கூறப்படுகிறது. அப்போது அந்த சாலையில் ஆட்கள் யாரும் இல்லை. அவரின் எதிரே வந்த நபர் ஒருவர், திடீரென அந்த சிறுவனின் சைக்கிளை மறித்துள்ளார்.

அரபி வகுப்பு

சிறுவன் சைக்கிளின் முன் பக்கம் கை வைத்து அதை நகர விடாமல் தடுத்துள்ளார். ஏய் எங்கே செல்கிறாய் என்பது போல கேட்டு, அவரிடம் சண்டைக்கு செல்வது போல கத்தி உள்ளார்.

அந்த சிறுவன் எதுவுமே செய்யாத போதும் வேண்டும் என்றே இந்த மர்ம நபர் சண்டைக்கு செல்வது போல் சென்றுள்ளார். அவருக்கு நடுத்தர வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. மிகவும் கோபமாக இருந்துள்ளார்.

சிறுவன்

அந்த சிறுவனை முறைத்து பார்த்து.. ஏய் உனக்கு குல்லா ஒரு கேடா என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் அங்கிருந்து சைக்கிளில் வேகமாக ஓடி தப்பி சென்றார்.

இதையடுத்து அசோக் காவல் நிலையத்தில் அவரின் பெற்றோர் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் அப்பகுதி இஸ்லாமியர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து போலீசார் உடனே விசாரணையில் குதித்தனர். அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி

இந்த சோதனையில், அந்த மர்ம நபருக்கு 40 வயது இருக்கும் என்று தெரிய வந்தது. அவரை முழுமையாக அடையாளம் காண முடியவில்லை. குறுகலான சாலையில் எதிரே அந்த இஸ்லாமிய சிறுவன் வந்ததும், அவரின் சைக்கிளை இந்த நபர் இடிப்பது போல சென்று இருக்கிறார்.

அப்போது கோபத்தில் அவர் குல்லா ஒரு கேடா என்று கத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே