வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்ய வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்தவகையில், சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இன்று 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டன.

இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் தொடங்கிவைத்ததையடுத்து ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்ட லாரிகள், ஆக்சிஜன் தேவையுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே