இன்றைய கொரோனா அறிவிப்பில் விடுபட்ட 444 மரணங்களும் சேர்க்கப்படும் – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கடந்த ஜூன் 10-ம் தேதி வரை 444 கரோனா மரணங்கள் விடுபட்டள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியைத் திறந்து வைத்த பிறகு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை 444 கரோனா மரணங்கள் விடுபட்டுள்ளது.

மருத்துவர் வடிவேலன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் விடுபட்ட கரோனா உயிரிழப்புகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் வேறு காரணங்களால் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட 444 பேர் கரோனாவால் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறினார்.

எனவே, இன்றைய கரோனா குறித்த அறிவிப்பு செய்தியில் விடுபட்ட 444 மரணங்களும் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், விடுபட்ட 444 பேருக்கும் வேறு பல நோய்களும் இருந்தன.

இவர்களில் ஒரு சிலர் மட்டுமே கரோனாவால் உயிரிழந்துள்ளனர். கரோனா பலி அதிகரிப்பதை நினைத்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே