புத்தகம் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி..?

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகம் மற்றும் இணையதளத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை (ஏப்.,20) இரவு 10 மணி முதல் 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வைப் புத்தகம் மற்றும் இணையதளம் பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஒருவரி கேள்வி பதில் போல் இல்லாமல், விரிவாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே